சுவிஸில் செய்திகளின் மறுபக்கம் நூல் அறிமுக விழா

39shares
Image

மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்களின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி (08.09.2018 ) சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் ( Industrie str 27, 9430 St.margrethen ) நடைபெற உள்ளது.

வைத்தியகலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் நடைபெறும் இந்நூல் அறிமுக விழாவில் நூல் விமர்சன உரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு. குணசீலன், ஊடகவியலாளர் சண். தவராசா ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

வரவேற்புரையினை ஏற்பாட்டுக்குழு சார்பில் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய பரிபாலனசபை தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் நிழ்த்துவார்.

சிறப்புரையினை அரசியல் விமர்சகர் பிறேம் சிவகுரு( ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்தி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ) நிராஜ் டேவிட் (ஐ.பி.சி தொலைக்காட்சி நிறைவேற்றுப்பணிப்பாளர், அரசியல் விமர்சகர்) ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

இலங்கையின் இன விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம் மற்றும் ராஜதந்திரப் போராட்டம் போன்றனவற்றில் ஒரு ஊடகவியலாளராக களமாடிய சிரேஷ;ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் அவர்கள், இந்த முப்பரிமான போராட்டத்தில் இதுவரை வெளிவராத பக்கங்களை அனுபவ ரீதியாக தனது புத்தகத்தில் விபரித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க