விக்கியின் புதிய அரசியல் பிரவேச கூட்ட அழைப்பிதழில் புலிச் சின்னம்!

173shares

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளை மறுதினம் யாழில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பலருக்கும் அழைப்புகள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அழைப்புக் கடிதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிச் சின்னத்துடன் மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம் எனப் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மக்கள் பேரவையால் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளை தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேச அறிவிப்பும் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ் நகரிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையால் பலருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இவ் அழைப்புதழும் அனுப்பப்பட்டுருக்கின்றமை பலத்த சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`