யாழ் மண்ணில் ஐபிசி தமிழின் மற்றுமோர் உதயம்!

410shares

ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் நிறுவப்பட்ட கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்களுக்கான காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கைவினைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயம் முன்பாக இந்த காட்சியகம் மற்றும் விற்பனையம் திறக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் கைவினைப் பொருட்களைத் தயாரிப்பதற்கான கைத்தொழில் பேட்டை கோப்பாயில் கடந்த ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

நவீன இயந்திரங்களுடன் கூடிய இந்த கைத்தொழில் பேட்டையில் சித்திரம், தையல், கைவினைப் பொருட்கள் என்பன தயாரிக்கப்படுகின்றன.

இந்த கைத்தொழில் பேட்டையின் திறப்பு விழாவில் கருத்து வெளியிட்ட ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் கருத்து, இன்னும் போர் ஓயவில்லை எனவும் தொழிலுக்கான போர் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது எனவும் கூறியிருந்தார்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வகையில் கைவினைப் பொருட்களைத் தயாரிப்பதற்கான கைத்தொழில் பேட்டையின் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் பேட்டையின் இயக்குநர் தம்பிராசா சுரேஷ்குமார் தலைமையில் இன்று இன்று காலை 10 மணியளவில் இந்த திறப்பு விழா நடைபெற்றிருந்தது.

ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் கிறின் கிறாஸ் ஹோட்டலின் உரிமையாளர் தியாகராஜா ஜெயசீலன் ஆகியோர் கூட்டாக றிபன் வெட்டி காட்சியகம் மற்றும் விற்பனையகத்தை திறந்துவைத்தனர்.

இதன்பின்னர் மங்கல விளக்கேற்றப்பட்டு, முதல் நாளுக்கான விற்பனை பொருட்களும் திறப்பு விழாவிற்கு வருகைதந்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டது.

கலாசாரத்தை பேணும் வகையிலான உற்பத்திகளும் உள்ளுரில் கழிவுகளாக அறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் இங்கு காணப்படுகின்றன.

இந்த காட்சியகம் மற்றும் விற்பனையகத்திற்கு வெளிநாட்டவர்களும் உள்நாட்டவர்களும் சென்று, பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க