யாழில் வடகிழக்கு பிறிமியர் லீக் உதைபந்தாட்ட தொடர் : ஐ.பி.சி தமிழ் அணியும் களத்தில்

136shares
Image

ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்கா சிறி ஆகிய நிறுவனங்கள் சார்பில் விளையாடும் அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் வட கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழில் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படும் அணிகள் விளையாடும் இந்த தொடருக்கான கிண்ண அறிமுகம் மற்றும் அணி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு யாழிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.

தமிழ் உதைபந்தாட்ட மன்றம் ஏற்பாடு செய்துள்ள வட கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர், 2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது பருவகாலப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.

வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளதுடன்,இதுவரை ஒன்பது அணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி, இரண்டு மாதங்கள் வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் மின்னொளியில் விளையாடும் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஐ.பி.சி தமிழை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளியூர் கிங்ஸ் அணியும் லங்காசிறி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் றிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த தொடரில் இதுவரை பின்வரும் அணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

கிளியூர் கிங்ஸ் விளையாட்டு கழகம் - கிளிநொச்சி மாவட்டம்

றிங்கோ ரைய்ரன்ஸ் விளையாட்டு கழகம் - திருகோணமலை மாவட்டம்

மன்னார் ஏப்.சி விளையாட்டு கழகம் - மன்னார் மாவட்டம்

வவுனியா வொரியஸ் விளையாட்டு கழகம் - வவுனியா மாவட்டம்

முல்லை ஃபீனிக்ஸ் விளையாட்டு கழகம் - முல்லைத்தீவு மாவட்டம்

ரில்கோ காங்கிரஸ் விளையாட்டு கழகம் - யாழ்ப்பாண மாவட்டம்

வல்லை ஏப்.சி விளையாட்டு கழகம் - வல்வெட்டித்துறை

நோதர்ன் எலைய்ட் ஏப்.சி விளையாட்டு கழகம் - வல்வெட்டித்துறை

தமிழ் யுனைட்டட் விளையாட்டு கழகம் - யாழ்ப்பாண மாவட்டம்

இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் நான்கு வீரர்கள் கொண்டிருப்பது கட்டாயமானது.

ஏனைய ஐந்து வீரர்களும் வடக்கு கிழக்கிலுள்ள எதாவது ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த அல்லது வெளிநாட்டு வீரர்கள் இருவர் ஓர் அணியில் விளையாடலாம் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போட்டிகளை கண்டு களிப்பதுடன், வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்க விளையாட்டு இரசிகர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க