விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - ஆறாம்நாள் ஆட்டங்கள் ஆரம்பம்! (முதல்பாதி ஆட்ட விபரங்கள் )

13shares

(இரண்டாம் இணைப்பு)

யாழ்.துரையப்பா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வல்வை எப்.சி அணி இரண்டு கோல்களை போட்டநிலையில் 2 : 0 முன்னிலை பெற்றநிலையில் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதேபோன்று முல்லைத்தீவு இரணைப்பாலை மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முல்லை பீனிக்ஸ் அணி 2 : 0 முன்னிலை பெற்றநிலையில் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

மற்றுமொரு போட்டியில் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் மன்னார் எப்.சி கிளியூர் கிங்ஸ் அணிகள் 1 : 1 என கோல்களை போட்டு சமநிலையில் உள்ள நிலையில் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆறாவது நாள் ஆட்டம் இன்றையதினமும் மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் யாழ்.துரையப்பா மைதானத்தில் தமிழ் யுனைட்டட் அணி வல்வை எப்.சி அணியுடன் மோதுகிறது.இந்தப்போட்டி ஆரம்பமாகி சிறிது நேரத்திலேயே வல்வை எப்.சி அணி ஒரு கோலை போட்டு முன்னிலை வகிக்கிறது.

இதேபோன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மைதானத்தில் முல்லை பீனிக்ஸ் அணி றிங்கோ ரைற்றான்ஸ் அணியுடன் மோதும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா நகரசபை மைதானத்தில் மன்னார் எப்.சி அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் களமிறங்கியுள்ளது.

மிகவும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்தப்போட்டியைகாண ரசிகர்கள் மைதானத்தை சூழ குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.எந்த அணிகள் வெற்றிபெறும் சற்றுநேரத்தில் வந்துவிடும் முடிவு.

இதையும் தவறாமல் படிங்க