இலங்கை வரலாற்றிலேயே மிகப்பிரமாண்ட போட்டித் தொடர்! உள்ளூர் வீரர்களுக்கு முக்கிய களம்

65shares

ஐபிசி தமிழ் பிரதான அனுசரணையில் இலங்கை வரலாற்றிலேயே உள்ளுர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற மாபெரும் உதைபந்தாட்ட திருவிழா நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆக்ரோஷமான ஆரவாரத்துடன் இனிதே நிறைவடைந்தது.

வடக்கு கிழக்கில் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் இருந்த வீரர்களின் திறமைகளுக்கு அடித்தளமிடும் வகையில் அவர்களை வெளிஉலகத்துக்கு கொண்டுவந்து காட்டியுள்ளது ஐபிசி தமிழ்.

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பரிசுத்தொகை, இப்படியொரு தொடரே இதுவரை நடக்கவில்லை என்பதற்கு இந்த வடக்கு கிழக்கு பிறிமியர் உதைபந்தாட்ட தொடர் சான்று பகரும்.

மொத்தம் 67 போட்டிகள் 12 அணிகள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பிரமிப்பூட்டும் வகையில் வீரர்களின் மயிர்க்கூச்செறியும் பந்து பரிமாற்றம் என பார்வையாளர்களை பரவசப்படுத்திய போட்டிகள்.

ஆம் இதுதான் வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் தொடர்.

இது தொடர்பில் போட்டிகளை முன்னின்று நடத்திய நிமலதாசன் என்ன சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரை ஆரம்பிக்கும் போது பல கேள்விகளின் மத்தியிலேயே ஆரம்பித்தோம்.

அவ்வாறிருந்தும் கடந்த வருடம் இந்தப் போட்டிகளை சிறந்த முறையில் நடத்த சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்ததே இதற்கு காரணம்.

இதற்கு நாம் ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாங்கரன் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

எமது கருவை முழுமையாக உள்வாங்கி அதைவிட பல பரிமாணங்களில் சிந்தித்து இந்த போட்டித் தொடரை மேலும் எந்தெந்த வகையில் சிறப்பாக சர்வதேச தரத்தில் பேசப்படக்கூடிய அளவுக்கு எமக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதுவே இம்முறை மிகவும் இலகுவாக இந்த போட்டிகளை நடத்த காரணமாகும்.

உதைபந்தாட்ட ஜாம்பவானான வெள்ளை கூறுகையில்

எமது காலத்தில் இவ்வாறான பிரமிப்பூட்டும் வகையிலான போட்டிகள் நடைபெறவில்லை என்கிறார்.பொழுதுபோக்கக்காகவே எமது விளையாட்டுக்கள் முன்னர் இடம்பெற்றன. தற்போது இந்த உதைபந்தாட்டப்போட்டிகள் மற்றொரு கட்டத்துக்கு போகுமளவுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பல இக்கட்டான சூழலிலும் எவ்வித தடங்கலும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்கிறார்.

இவ்வாறு இந்தவருடம் நடைபெற்ற போட்டிகள் இறுதிநேரம்வரை எந்த அணிக்கு வெற்றி என்பதே தெரியாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றமை மிகவும் சிறப்பம்சமாகும்.

வடக்கு கிழக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட அதேவேளை வெளிநாட்டு வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் இப்படியொரு போட்டி இதுவரை நடந்ததேயில்லை.இது வடக்கு கிழக்கு வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

அத்துடன் வீரர்களின் ஏலத்தொகை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தவருடம் கிளிநொச்சி அணிக்காக விளையாடிய வீரர் ஒருவர் ஸ்ரீலங்கா தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டதற்கு கூட வடக்கு கிழக்கு பிறிமியர் லீக் உதைபந்தாட்ட தொடரே காரணம்.

உதைபந்தாட்ட தொடரில் வீரர்களுக்கான பரிசுத் தொகையால் அவர்களின் வாழ்வாதாரம் கூட செழிப்படைந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முதல் இடத்தைப்பிடித்த அணிக்கு ரூபா ஒருகோடி பணம்,தங்கப்பந்து ,தங்க காலணி மறறும் பார்வையாளர்களுக்கான பரிசு என களை கட்டியது இந்த தொடர்

இவ்வாறு வடக்கு கிழக்கில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற போட்டித் தொடர் நேற்று (5.10.2019) துரையப்பா மைதானத்தில் மின்னொளியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்தப்போட்டியில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டித் தொடரை பார்வையிட

https://www.facebook.com/ibctamiljaffna/videos/510128189818910/

இறுதிப்போட்டியில் ரில்கோ கென்கியூரஸ் மற்றும் வல்வை எப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என நிரூபித்தன. இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலை போட வெற்றி தண்ட உதைமூலம் தீர்மானிக்ப்பட்டது. இதில் ரில்கோ கென்கியூரஸ் அணி 5.4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அந்த பெறுமதியான பணப்பரிசை தட்டிச் சென்றது.

அடுத்தவருடமும் இந்த போட்டி நடைபெறும் இந்தவருடத்தை விடவும் மிகச்சிறப்பாக, மிகவும் பிரமாண்டமாக இதனை எதிர்பார்க்கலாம்.