பிரான்ஸில் 16,000பேரின் இரத்தக் கறை படிந்த கில்லெட்டின்!

9shares

பிரான்சின் புகழ் பெற்ற புராதன பொருட்கள் ஏலம் விடப்படும் இடமாகிய Drouot ஹோட்டல், தலைகளை வெட்ட பயன்படுத்தப்படும் கில்லெட்டின் இயந்திரம் ஒன்றை ஏலம் விட்டது.

10 அடி உயரமுள்ள அந்த இயந்திரம், பிரான்ஸ் கோடீஸ்வரர் ஒருவரால் 8,008 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மரணதண்டனை 1981 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டில், கில்லெட்டின்களின் விற்பனை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருக்கும் நிலையில், பிரான்சில் ஏலம் விடப்படுவதை கண்காணிக்கும் அமைப்பு ஒன்று இந்த ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் ஏலத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்த அமைப்பிற்கு இல்லை, காரணம் அந்த கில்லெட்டினை வைத்திருந்த Paris jazz club ஒன்று நஷ்டமடைந்ததால்தான் அதை ஏலத்தில் விட முடிவு செய்தது.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கில்லெட்டின் ஏலம் விடப்பட்ட இரண்டே நிமிடங்களில் அதை Christophe Fevrier என்னும் பிரான்ஸ் தொழிலதிபர் ஏலத்தில் எடுத்து விட்டார்.

இந்த கில்லெட்டின் என்று அழைக்கப்படும் தலை வெட்டும் இயந்திரங்கள், 1793க்கும் 1794க்கும் இடையே பிரெஞ்சு புரட்சிக்குப்பின் 16,000பேரின் தலைகளை வெட்ட பயன்பட்டது என்பது பிரான்சின் இரத்தக் கறை படிந்த வரலாறு ஆகும்.

பிரான்சில் கடைசியாக கில்லெட்டினால் கொல்லப்பட்ட நபர் Hamida Djandoubi என்னும் துனிஷியாவை சேர்ந்தவர் ஆவார்.

ஒரு இளம்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக 1977 ஆம் ஆண்டு அவரது தலை வெட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், தற்போது ஏலத்தில் விடப்பட்ட கில்லெட்டின், நிஜ கில்லெட்டின் இயந்திரத்தின் ஒரு மாதிரிதான் என்றும் அது யாருடைய தலையையும் வெட்ட பயன்படுத்தப்படவில்லை என்றும் Drouot ஹோட்டல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க