பரிஸில் தாக்குதல்! ஆயுதாரியை குண்டுகளால் தாக்கிய மக்கள்!!

  • Prem
  • September 10, 2018
389shares

பரிஸ் நகரில் நேற்றிரவு மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஆயுததாரி ஒருவர் நடத்திய கத்திக்குத்து மற்றும் இரும்புக்கம்பி கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். இதில் நால்வர் படுகாயப்படுத்தப்பட்டனர்.

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள கே து லா லுவார் ((Quai de la Loire) வீதியில் உள்ள திரையரங்குக்கு அருகில் இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது

தாக்குதலாளி வீதியால் சென்ற மக்களை கத்தியால் குத்த ஆரம்பித்தார். சிலரை இவர் கத்தியால் குத்தியநேரம் அந்த இடத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பெத்தாங் எனப்படும் இரும்புக்குண்டுகளை உருட்டி விளையாடும் விளையாட்டை விளையாடிக்கொண்டிந்தவர்கள் அவதானித்தனர்.


இதனையடுத்து அவர்கள் தாம்வைத்திருந்த இரும்புக்குண்டுகளை தாக்குதலாளியை நோக்கி வீசினர். அவ்வாறு வீசப்பட்ட ஒரு குண்டு தாக்குலாளியின் தலையில் பட்டது.

இதனையடுத்து அவர் அந்த இடத்தைவிட்டு ஓடி இன்னொரு இடத்தில் வைத்து பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீது தாக்குதலை நடத்தினார்.

இந்த தாக்குதல் குறித்த செய்தியை அறிந்து விரைந்த சென்ற காவற்துறையினர் தாக்குலாளியை றியு து லா றொக்கத் Ruede la roquette) வீதியில் மடக்கி கைது செய்தனர். தற்போது அவர் மீது தீவிரவிசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காயமடைந்த இருவரில் இரண்டுபேர் பிரித்தானியாவில் இருந்த சுற்றுலாவுக்கு சென்ற பெண்கள். ஒருவர் எகிப்தைசேர்ந்தவர். ஏனைய அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். இது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என பரிஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க