பிரான்சில் வசிக்கின்றீர்களா? உங்களுக்கு அரசநிதியில் 3000 யூரோக்கள்!

  • Prem
  • September 11, 2018
111shares

பிரான்சில் வாழும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சராசரியாக வருடாந்தம்3000 யூரோக்களை மருத்துவகாப்பு மற்றும் சமூகபாதுகாப்பு (செக்யூரிட்டி சோசியல் ) நிறுவனம்செலவீனம் செய்யும் தகவல் அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ சமூகபாதுகாப்பு நிறுவனத்தின் அடுத்து ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்டம்தயாரிக்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ஆண்டை விடமேலதிகமாக 200 மில்லியன் யூரோ தேவைப்படும் எனவும் தெரியவருகிறது.

பிரான்சில் மூதாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும் அங்குவாழும் மக்களிடையே நாட்பட்ட நோய்களின் தாக்கம் தீவிரம் அடைவதாலும் மருத்துவ செலவீனம்கோடிக்கணக்கான யூரோக்களாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க