பிரான்சில் கடும் பாதுகாப்பு 65.000 காவற்துறை களமிறக்கம்

  • Prem
  • December 06, 2018
70shares

வன்முறை கலந்த மஞ்சள்அங்கி போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரிவிதிப்பை அடுத்தாண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து கைவிடுவதாக பிரான்ஸ்அரசு அறிவித்தபோதிலும் எதிர்வரும் சனிக்கிழமையன்றும் நாடாளாவியரீதியில் நான்காவது மஞ்சள்அங்கி போராட்டங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சுமார்65,000 காவற்துறையினர் களமிறக்கபட்டுள்ளனர்.

தலைநகர் பரிசிலும் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. குறிப்பாக சில அருங்காட்சியகங்கள் அன்றையதினம் திறக்கப்படமாட்டாதென அறிவிக்கபட்டுள்ளது. கடந்த சனியன்று இடம்பெற்ற போராட்டத்தில் பரிஸ்நகரில் சில அருங்காட்சி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வாரங்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டங்களால் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க