லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!!

1136shares

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்