பரிஸ் பேராலயத்தில் கட்டுக்கடங்காத பெரும் தீ! பிரதான கோபுரத்துக்கும் பரவியதால் கதறியழும் மக்கள்!! (புதிய வீடியோ)

  • Prem
  • April 15, 2019
826shares

Church

பிரான்ஸ் தலைநகர் பரிசின் வரலாற்று புகழ் வாய்ந்த நோத்ர்டாம் து பரிஸ் (எமது அன்னை)பேராலயத்தில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து உலகளாவியரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தீயை அணைப்புப்பணியில் சுமார் 400 தீயணைப்புப்படையினர்மிகக்கடுமையாக போராடி வருகின்றனர். பிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் அந்த இடத்துக்குசென்றுள்ளார். தீவிபத்து காரணமாக பேராலயத்தின் கூரையும் மேற் கூம்பு கோபுரமும் இடிந்துவிழுந்துள்ளது. தற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளமதல் தேவாலயத்தின் எதிர்காலநிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.

தேவாலயத்தில் இரண்டு பிரதான கோபுரங்களில் ஒன்றில் இருந்துதான் இந்த தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது இந்த விபத்துகுறித்து உடனடியான விசாணைகளுக்கு பரிஸ் நகர வழக்குத்தொடுனர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் முக்கிய தலைவர்கள் இந்த தீவிபத்து குறித்து தமதுஅதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

எமது அன்னை அர்த்தத்துக்குரிய பெயரான நோர்த் டாம் எனப்படும்இந்தப்பேராலயம் வரலாற்று புகழ்வாய்ந்தது. பிரெஞ்சு கோத்திக் கட்டிடக்கலையின் முக்கியஅடையாளமான இந்த ஆலயமே பரிஸின் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமாகும். பரிஸ்நகரில்உல்லாசப்பயணிகளை கவரும் முக்கிய மையம் இது.

மிகப்புராதன கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமானப்பணிகள்கி. பி. 1163 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் பகுதிபகுதியாக பல ஆண்டுகளாக இதன்கட்டுமானப்பணி இடம்பெற்றது.

1793 இல் நடந்த பிரஞ்சுபுரட்சியில் நடந்த வன்செயல்களாலும்,இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், இந்த ஆலயம் சேதமடைந்தது எனினும் இன்று மாலைஏற்பட்ட தீவிபத்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தேவாயலத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்றபோதே இந்ததீவிபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதான கோபுரத்திலும் தீபரவியுள்ளதால் மக்கள் ஆற்றொணா துயரத்தில் கதறியழுது வருகின்றனர்.

Image0

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்