இயேசுவின் முள்முடி காப்பாற்றப்பட்டது! ஆலயத்தின் உள்ளே காணமுடியாத காட்சி!!

  • Prem
  • April 16, 2019
1425shares

பெரும் தீ விபத்துக்கு உள்ளான பரிஸ் நோத்ர் டாம்( எங்கள் அன்னை) தேவாலயத்துக்கு உள்ளே இன்று காலை முதன்முறையாக அதிகாரிகள் சென்றுள்ளனர்

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் உட்பட்ட அதிகாரிகள் அங்கு சென்றபோது ஆலயத்தின் உள்ளே எங்கும் இருளும் கரியும் மண்டிக்கிடந்த காட்சிகள் பெரும் துயரக்காட்சிகளாக இருந்தன

நேற்று மாலை ஆலயத்தின் கூரைப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சுமார் 9 மணிநேரமாக போராடிய சுமார் 500 தீயணைப்பு படையினர் வெளிக்கோபுரங்கள் உட்பட தேவாலயத்தின் வெளிப்பகுதிகளை காப்பற்றினர்.

ஆனால் கூரையின் மூன்றில் இரண்டு பங்கும் ஆலயத்தின் முக்கிய அடையாளமான கூம்பும் அழிவடைந்துவிட்டது.

இனி மீண்டும் பேராலயம் கட்டியெழுப்ப்பபடவேண்டும். உள்ளுர் மற்றும் அனைத்துல நிதியுதவிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. இதுவரை பிரான்சின் இரண்டு பெரிய நிறுவனங்கள் மொத்தம் 300 மில்லியன் ஈரோ அன்பளிப்பு செய்வதாக அறிவித்துள்ளன. (Le groupe LVMH et la famille Arnault -200millions euros + François-HenriPinault 100 million euros )

ஆலயத்துக்;குள் இருந்த சில வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படைப்புகள் அழிக்கபட்டுள்ளன. ஆயினும் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது தலையில் சூடப்பட்டிருந்த முள்முடி என கருதப்படும் புனித முள் கிரீடம் மற்றும் சிலுவையில் அறைப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட ஆணிகளில் ஒன்று, 9 ஆம் லூயி மன்னனின் (புனித லூயி) ஆடை உட்பட சில பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கிறிஸதவர்களின் புனித வெள்ளிக்கு இன்னமும் 3 நாட்கள் உள்ள நிலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தால் மதயாத்திரிகர்கள் பெரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர். இன்றுகாலை ஆலயத்துக்கு அப்பால் உள்ள வீதிகளில் பக்தர்கள் முழந்தாழிட்டு பிரார்த்தனைகளை செய்துவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க