வன்சென்ற் லம்பேர்ட் பிரான்ஸ் அரசால் கொல்லப்பட்டாரா? அதிரும் வாதப்பிரதிவாதங்கள்!

  • Prem
  • July 11, 2019
21shares

கருணைக்கொலை குறித்து பிரான்சில் பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய வன்சென்ற்லம்பேர்ட் இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான வீதிவிபத்தில் உந்துருளியில் சென்றவன்சென்ற்; லம்பேர்ட் காயமடைந்தார். அந்த விபத்துக்குப்பின்னர் உடலில் முழுமையான உணர்வற்றநிலையில் கடந்த 10 வருடங்களாக வன்சென்ற் லம்பேர்ட் இருந்து வருகிறார்.

தற்போது 42 வயதுடைய அவர் அன்றில் இருந்து கடந்த 3 ஆந் திகதி வரை உயிர்காப்பு சாதனங்கள்பொருத்தப்பட்டு செயற்கையாக வாழ வைக்கப்பட்டார்.

ஆனால் அவருக்குரிய உயிர்காப்பு சாதனங்களை அகற்றி அவரை மரணிக்க செய்ய அவரது மனைவியும்சகோதரர்களும் விரும்பினர். ஆனால் அவரது பெற்றேர் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து சட்டப்போராட்டங்களை ஐ.நா மனித உரிமைப்பேரவை வரை நடத்தியதால் கருணைக்கொலைசார்ந்த இந்த விடயம் பிரான்சில் பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது.

கடந்த மேமாதம் வன்செனற்; லம்பேர்டின் பெற்றோர் மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்இறுதிநேர கோரிக்கைகளுக்கு மத்தியிலும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் உயிர்காப்பு சாதனங்கள்அகற்றப்பட்டு இயற்கை மரணத்துக்குள் வன்சென்ட் லம்பேர்ட் தள்ளப்பட்டார்

ஆயினும் பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதிநேர உத்தரவால் மீண்டும் உயிர்காப்புகருவிகள் பொருத்தப்பட்டன.

எனினும் இந்த மாத முற்பகுதியில் மீண்டும் வன்சென்ட் லம்பேர்டின உயிர்காப்பு சாதனங்களைஅகற்றப்பட்டதால் இன்று காலை 8.24 க்கு அவரது உயிர்பிரிந்தது.

தற்போது மீண்டும் கருணைக்கொலை குறித்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க