பரிசில் பறக்கும் தட்டு; அதிசயித்து ஆரவாரித்த மக்கள்!

  • Prem
  • July 15, 2019
459shares

பிரான்சின் படைத்துறையில் விரைவில் பறக்கும் பலகை வான் சுற்றுக்காவல்படையினர் இணையக்கூடும் என்பதை நேற்று அதன் தேசிய விழாவான 14 யூலை நாளில் இடம்பெற்றஅணிவகுப்பு காட்சிகளில் ஒரு காட்சி பகிரங்கப்படுத்தி விட்டது.

நேற்றைய நாளில் சாம்ஸ் எலிசே பெரு வீதியில் இடம்பெற்ற இந்தஅணிவகுப்பில் பிரெஞ்சு அரச தலைவர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்துடன் ஈர்த்த ஒரு காட்சியும்இதுதான்.

தாரை இயந்திரம் பொருத்தப்பட்ட ஒரு கருவியில் (பறக்கும்பலகைஅல்லது Jet-powered flyboard ) வான்பரப்பில் துப்பாக்கி சகிதம் நிலையாக நின்ற ஒருவர்வானில் சீறிச்சென்ற காட்சி இது.

இந்தக்கருவியை வடிவமைத்த கடற்கலசவாரிப்பிரியரான பிராங்கிசபாத்தா தான் இவ்வாறு ஆச்சரிய மூட்டும் வகையில் பறந்து சென்று தரையிறங்கினார்

40 வயதான சபாத்தா பிராச்சின் மார்செய் பகுதியை சேர்ந்தவர்.இவ்வாறா தாரை இயந்திர கருவிகளின் கண்டுபிடிப்பாளர். அந்த வகையில் நேற்று அவர் பறந்துசென்ற கருவிதான் நவீன உலகின் முதலாவது பறக்கும் பலகை. ஏற்பகனவே 2016 இல் தனது கண்டுபிடிப்புஇயந்திரம் மூலம் 2,252 மீற்றர் உயரம் வரை பறந்து கின்னஸ் சாதனையை நிகழத்தியவர் பிராங்கிசபாத்தா.

இவர் உருவாக்கி நேற்று அணிவகுப்பில் பறந்த இந்தஎரிவாயு தாரைஇயந்திரம் அதிக பட்சமாக பத்தாயிரம் அடி உயரத்தில் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகம் வரைபறக்கக்கூடியது

ஆகமொத்தம் அந்தரத்தில் பறந்து வந்து சாகசம் செய்து மக்கள்கூட்டத்தை அதிசயித்து வாய் பிளக்க வைத்த அதே சமகாலத்தில் இந்த கருவி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரெஞ்சு அரசதலைவர் இமானுவேல் மக்ரன் பிரெஞ்சு படைத்துறையின்நவீன மற்றும் புதுமையான முயற்சியை எடுத்துகாட்டும் முயற்சி எனப்பாராட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க