பிரான்சில் ஏற்பட்ட அனர்த்தம்! மீட்பு பணிக்கு சென்றவர்கள் பலியாகிய சோகம்!

9shares

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை மற்றும் புயல் விபத்துக்களின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ரேடார் செயலிழந்ததால், கீழே விழுந்து நொருங்கியதில் 3 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.

பிரான்சின் வார் பகுதியில் உள்ள லீ-லக்-எட்-லீ-கேனட் பகுதியை நோக்கி மீட்புப்படை ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பவுச்செஸ்-டு-ரோன் பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு சாதனமான ரேடார் மற்றும் ரேடியோ ஆகியவை செயலிழந்தன.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் நள்ளிரவு 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் நொருங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் சென்ற மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...