கொரோனாவால் பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளம் குடும்பப் பெண்

2422shares

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் - நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர், தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகெங்கிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களும் உயிரிழந்து வருகின்றார்கள்.

இதேவேளை, அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this?

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி