பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

1209shares

பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றது.

இன்றையதினம் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இதனை நிஸ் நகர மேயர் மற்றும் பிரான்ஸ் அரசியல்வாதி ஒருவரும் உறுதி செய்துள்ளதுடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தேவாலய பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்