பிரான்ஸில் உச்சபட்ச பதற்றம் படையினர் பெருமளவில் குவிப்பு -துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

588shares

பிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக மூவர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் வீதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த 16-ம் திகதி சாமுவேல் பெடி என்ற வரலாற்று ஆசிரியர் பயங்கரவாதியால் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேமி என்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினான்.

பயங்கரவாதியின் இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரு பெண் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலையடுத்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரான்சின் அவிங்கான் மாகாணத்தில் உள்ள மோண்ட்பவேட் என்ற நகரில் உள்ள ஒரு தெருவில் இன்று மாலை படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி மிரட்டினான். அந்த பயங்கரவாதியிடம் ஆயுதத்தை கைவிட்டு சரணடையும் படி பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அந்த பயங்கரவாதி 'கடவுளே சிறந்தவன்’ என அரபு மொழியில் கூறிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிவந்து பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டான்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கையாக அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஒரே நாளில் இரண்டு பயங்கரவாத சம்பவங்களால் பிரான்ஸ் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 3 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 7 ஆயிரம் வீரர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நவீன ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும், அந்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவான குழுக்களை குறிவைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பிரான்ஸ் முழுவதும் உச்சபட்ச பதற்றம் ஏற்பட்டுள்ளது.

You May Like This Video

Tags : #France #Army
இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி