படுகொலைகளின் எதிரொலி - பிரான்ஸ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல்!

595shares

பிரான்ஸ் மக்களை தண்டிப்பதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு உள்ளதென மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த கால படுகொலைகளுக்காக மில்லியன் கணக்கான பிரான்ஸ் மக்களை கொல்வதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவரை கொலை செய்வதை நான் ஏற்கவில்லை.

கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது ஏனையவர்களை அவமதிப்பதற்கு பயன்படக்கூடாது.

கடந்தகால படுகொலைகளுக்காக சீற்றமடைவதற்கும் மில்லியன் கணக்கான பிரான்ஸ் பிரஜைகளை கொல்வதற்கும் முஸ்லிம்களுக்கு உரிமையுள்ளது.

ஆனால் முஸ்லிம்கள் இதுவரை கண்ணிற்கு கண் என்ற பழிவாங்கலில் ஈடுபடவில்லை

முஸ்லிம்கள் அதனை செய்யமாட்டார்கள் - பிரான்சும் அதனை செய்யக்கூடாது.

சீற்றமடைந்த நபர் ஒருவரின் நடவடிக்கைக்காக நீங்கள் முஸ்லிம்களையும் அவர்களது மதத்தினையும் குற்றம்சாட்டியுள்ளீர்கள்.

இதனால் முஸ்லிம்களுக்கு பிரான்சை தண்டிக்க உரிமையுள்ளது என்று பதிவிட்டிருந்தார், எனினும் குறித்த பதிவு டுவிட்டர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு