திட்டமிட்ட தமிழின அழிப்பு தொடர்பாக வேற்றின மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் ஜேர்மன் கண்காட்சி!

4shares
Image

மே 18 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி ஜேர்மனியில் தொடர்ந்தும் 7 ஆவது நாளாக கவனயீர்ப்பு கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

குறித்த கண்காட்சி நேற்றைய தினம் Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றுள்ளது. வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இன அழிப்பை ஆதாரபூர்வமாக இக் கண்காட்சியில் வடிவமைத்து, ஆங்கிலத்திலும் ஜேர்மன் மொழியிலும் விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு கண்காட்சி இன்ழறய தினம் காலை Nurnberg நகரத்திலும் மாலை Stuttgart நகரத்திலும் இடம்பெறவுள்ளது.

மேலும், மே 18, வெள்ளிக்கிழமை தமிழின அழிப்பு நாள் அன்று மதியம் 2 மணியளவில் Dusseldorf மாநகரில் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டு , உள்ளூராட்சி பாராளுமன்றத்தின் முன்பாக நினைவு நிகழ்வுகள் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி வேற்றின மக்கள் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பை விளங்கிக்கொள்ளகூடிய வகையில் அமைந்துள்ளது. நடைபாதையில் செல்லும் வேற்றின மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு ஈழத்தமிழர்கள் மீது கரிசனையும், அவர்கள் தொடர்பான உண்மையையும் அறிந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

சிறுமியின் மரணம்;விசாரணை செய்யுமாறு அமைச்சர் உத்தரவு,மூடி மறைக்க பொலீசார் முயற்சி?- நேரடி ரிப்போர்ட்

சிறுமியின் மரணம்;விசாரணை செய்யுமாறு அமைச்சர் உத்தரவு,மூடி மறைக்க பொலீசார் முயற்சி?- நேரடி ரிப்போர்ட்

“அப்பி சுத்தகாறா”!- கொட்டொலிகளுடன் அலைந்த காடையர்கள்!!   கறுப்பு யூலை தடங்கள்…..

“அப்பி சுத்தகாறா”!- கொட்டொலிகளுடன் அலைந்த காடையர்கள்!! கறுப்பு யூலை தடங்கள்…..