புலம்பெயர் தேசமொன்றில் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!

353shares

ஜேர்மனில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை ஜேர்மன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தமது தடுப்பு காவலில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரை சுட்டு படுகொலை செய்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சிவதீபன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.

2009 யுத்தம் முடிந்த சமயத்தில் ஜேர்மனிக்கு சென்றிருந்த இவரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்தனர்.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இராணுவத்தினரை சுட்டுக்கொன்று, தீ மூட்டியதாக குற்றம்சாட்டி டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி