ஜேர்மனியில் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டோர் காயம்

561shares

மேற்கு ஜேர்மனிய நகரமான போக்மாசனில் நடைபெற்ற களியாட்ட விழா ஒன்றில் மக்கள் கூட்டத்தின் மீது காரினால் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளி நிற மேர்சிடிஸ் கார் ஒன்று பிளாஸ்டிக் தடுப்புக்களைக் கடந்து வேகமாகச் சென்று மக்கள் கூட்டம் மீது மோதியுள்ளது. ஜேர்மன் நேரம் இன்று பிற்பகல் 2:30 க்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

29 வயதுடைய ஜேர்மன் பிரஜையான காரின் சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். எனினும் தாக்குதலின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சாரதி கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கினார் என்று தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை அடுத்து அனைத்துக் களியாட்ட விழாக்களையும் ரத்துச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி