மகிந்தவின் கட்டுப்பாட்டில் மைத்திரி? (அதிர்ச்சி விடியோ)

140shares

மகிந்த மைத்திரி உறவுநிலைபற்றி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்ற செய்திகளைக் கடந்து சமூகவலைத்தளங்களில், வேறு பல செய்திகளும் வதந்திகளாக உலவந்துகொண்டிருக்கின்றன.

மைத்திரி தொடர்பான இரகசிய வீடியோ ஒன்று மகிந்தவின் கரங்களில் கிடைத்துள்ளதால், மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் மைத்திரி வந்துவிட்டதாகவும் ஒரு செய்தி எதிர்தரப்பினர் மத்தியில் உலாவந்துகொண்டிருக்கின்றது.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பேரணி தொடர்பாக வெளிவந்துள்ள ஒரு காட்சி, இந்த வதந்திக்கு கைகால் வைப்பதாக அமைந்துள்ளது.

சிறிலங்கா தேசிய கீதம் பாடப்படுகின்ற பொழுது, மைத்திரி தனது கரங்களை அசைக்க உயர்த்துகின்ற பொழுது, மகிந்த அதனைத் தடுத்த காட்சி வெளியாகி, சமூகவலைத் தளங்களில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

ஒரு ஜனாதிபதியை பல லட்சம் மக்கள் முன்னிலையில் துனிவுடன் தடுத்துநிறுத்தும் வல்லமையை மகிந்தவுக்கு வழங்கியது எனது என்கின்ற கேள்விக்கு, மைந்தவின் கரங்களில் அகப்பட்டதாகக்கூறப்படும் வீடியோதான் காரணமா என்கின்ற பதில் கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க