Aries
சாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
Aries
இந்த வாரம் உங்களுக்கு நல்லதொரு தைரியம் தன்நம்பிக்கை விடாமுயற்ச்சி இதுவெல்லாம் இருக்கும். நினைத்ததை இப்போது சாதிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகள் அனைத்தும் சரியாகும். கடன் பட்டவர்கள் எல்லாம் அந்தக் கடன்பிரச்சனையில் இருந்து மீண்டு வருவீர்கள்.அல்லது கடனை அடைப்பதற்கு கூடுதல் தவணை கிடைக்கும். எதிரிகளின் பார்வையில் இருந்து விடுபட்டு முன்னேறத் தொடங்குவீர்கள். சிலருக்கு பூமி இலாபம் உண்டு. மனதிலே நல்ல உட்ஷாகம் இருக்கும். தெளிவு இருக்கும். குழப்பம் அனைத்தும் அகன்று இருக்கும்.தேவையான உதவிகள் தேவையான மனிதர்களிடத்திலே இருந்து உங்களுக்கு வந்து சேரும். உத்தியோகத்திலே கடமையுணர்வுடன் செயல்படுவீர்கள் எப்போதுமே ஒரு தர்ம நோக்கம் இருக்கும். இளகிய மனது உங்களுக்கு இருக்கும்.இதுவொல்லாம் உங்களுக்கு புண்ணியத்தைக்கொடுக்கும். இந்த வாரத்திலே உங்களுக்கு அதிஸ்டம் தரக்கூடிய எண்கள் 1 மற்றும் 9. அதிஸ்டமான நிறங்கள் வெளிர்சிவப்பு மற்றும் சிவப்பு.
Aries
இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனக்கவலை குறையும். தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் பணவரவு அதிகமாக இருக்கும்.பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ராசியை பார்க்கும் நிலையில் குரு மாறுவதால் சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இதற்கு கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள்மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்டநாள் பிரச்னைகள் இப்போது முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்கவேண்டி வரலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை பித்தம் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.
Aries
மேஷம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க! குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி அன்பர்களே! ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல் 7ம் இடமான துலாம் ராசிக்கு மாறும் குரு பிப்.13வரை அங்கு இருப்பார். அதன் பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராகு 5-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் கடகத்திற்கு மாறுகிறார். கேது 11-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். சனிராசிக்கு 8-ல் இருக்கிறார். அவர் டிச.18-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.   ஏப்ரல் 14- ஜீலை 31 குருவின் பார்வையால் வருமானம் உயரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகவும். சுபநிகழ்ச்சிகள் விடாமுயற்சியால் கைகூடும் வீடு, மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல்வாதிகள் பலன் எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு முயற்சிகேற்ற வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்மூலம் மகசூல் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.   ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31 குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர்.   2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13 மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளி போகலாம். பணியாளார்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். குருவின் 5-ம் பார்வையால் வருமானத்திற்கு குறைவிருக்காது, கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஆகும். அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர்.   பரிகாரங்கள் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் திருச்செந்தூர் முருகன்.

இன்றைய பலனை அறிந்துகொள்ள, உங்கள் ராசியை தேர்வு செய்யுங்கள்

இன்றைய ஜோதிடம்

ஐபிசி ஜோதிடத்திலிருந்து

மேலும்

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்!

தினசரி ராசி பலனை மின்னஞ்சல் மூலம் நேரடியாக பெறுங்கள்


Loading, Please Wait for a while...