ஸ்டெர்லைட் புரட்சி.. முன்னேறிய பொதுமக்கள்.. பொலிஸ் துப்பாக்கிச் சூடு!- நேரடி ஒளிபரப்பு

268shares
Image

ஸ்டெர்லைட்ஆலைக்கெதிரான போராட்டத்தில் காவலர்கள் நடத்திய தடியடியையும் மீறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. இதனை முன்னிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அதனைமுறியடிக்கும் விதமாக காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தினை கலைக்க முயற்சி செய்தனர். இதில் பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவலர்களை கற்களைகொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் பயந்து காவலர்கள் ஓட ஆரம்பித்ததால் பொதுமக்கள் தங்களது இலக்கான ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கும் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால், பொதுமக்களை கட்டுப்படுத்த திணறிய காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`