சொந்த மக்களைச் சுட்டுக்கொன்ற தமிழகப் பொலிஸார்! அதிர்ச்சியில் தமிழகம்!!

270shares
Image

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏரளாமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காத நிலையில், போராட்டத்தை வீரியமடையச் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக காவலர்கள் தடியடி நடத்தி போராட்டத்தினைக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் பொதுமக்கள் சிலர் படுகாயமடைந்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவலர்களை கற்களை கொண்டு திருப்பி தாக்க ஆரம்பித்தனர்.

இதனால் பயந்துபோன காவல்துறை செய்வதறியாது திகைத்து போராட்டத்தினை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டினை பயன்படுத்தியது. தமிழக காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூட்டினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொந்த மண்ணிலே உரிமைக்காக போராடிய தமிழக மக்களை கொன்றொழிப்பதா என தமிழ் ஆர்வலர்களும், அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`