20 அடி உயரத்திற்கு எழும்பும் ராட்சத அலைகள்!

186shares
Image

இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் மணல் புயலுடன், கடுமையான சூறாவளி காற்று வீசி வருவதால், 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் வரும் 30-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என முன்பே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் மணல் புயலுடன் கூடிய கடுமையான சூறாவளி காற்று வீசிவருவதால், 20 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்புகின்றன. இதனால் கடலோர பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா சென்றுள்ள பயணிகளையும், பக்தர்களையும் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேற்றும் பணியை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`