ஆப்பரேஷன் உபா ; சீமான், திருமுருகன் காந்திக்கு குறி - அதிர்ச்சி தகவல்கள்.!

951shares

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், திமுக தலைவர் கலைஞரின் மூப்பு ஆகியவை தமிழக அரசியலை ஓர் நிலையாமையில் தள்ளியுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை. அத்தகைய அரசியல் நிலையாமையினை பயன்படுத்தி மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு தனது ஜாகையை தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தரப்பு மூலமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி தரப்போ மக்கள் நலன் குறித்த கவலைகள் ஏதுமின்றி மோடி அரசு காலால் இட்ட உத்தரவினை தலையால் செய்துகொண்டிருக்கிறது.

அரசு மக்கள் பக்கம் இல்லாத காரணத்தினால், தங்களது உரிமைகளை தமிழக வாழ்வாதாரத்தினை (நீட், காவிரி, ஸ்டெர்லைட் )காத்திட தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர் தமிழக மக்கள். அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அம்மக்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசும் - மாநில அரசும் ஓர் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ச்சியாக தங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் கட்சிகளின் - அமைப்புகளின் தலைவர்களை வேரறுப்பது - சிறைப்படுத்துவது தான் அம்முடிவு.

சமீபத்தில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்ற பன்வாரிலால், தமிழகத்தில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகளின் பெயர்களை பட்டியலிட்டு மத்திய உள்துறையிடம் அளித்துவந்துள்ளதாக தகவ்லல்கள் கசிகின்றன.

அதன் படி சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கூடிய விரைவில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுவார்கள் என்றும் பகீர் தகவல்களை வெளியிடுகின்றன ஆளும் தரப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள். இந்த நடவடிக்கைக்கு உபா (unlawfull activities) என பெயரிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக வேல்முருகன் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`