மூன்றாவது நாளாக தொடரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம்!

3shares
Image

சென்னை எழிலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓயூவூதியத் திட்டத்தை அமுல்படுத்துதல், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு இதுவரை தங்களை அழைத்து எந்தவித பேச்சுவாரத்தையும் நடத்தாததை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 11-ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் இன்று 3-வது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் போராட்டம் தொடர்வதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`