ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசாணை வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி.!

21shares

தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நெடுங்காலமாகவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அந்த வகையில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சுமார் 13 பொதுமக்களை சுட்டுக்கொன்றது காவல்துறை.

தங்கள் வாழ்வாதாரத்தினை சிதைக்கிற ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி அற வழியில் போராடிய பொதுமக்களை அரசே சுட்டுக்கொல்வதா என்ற கண்டன குரல்கள் கிளம்பிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தடை விதிப்பதாக தெரிவித்து ஆலைக்கு சீல் வைத்தது அரசு. ஆனால், இது நிரந்தர தீர்வல்ல. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டுமேயானால் அரசு கொள்கை முடிவு மேற்கொண்டு அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர் அப்பகுதி பொதுமக்கள்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு ஒன்றினை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை "ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து அரசாணை வெளியிடவேண்டும். நிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது" என அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`