கனமழை எதிரொலி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!

15shares
Image

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்க உள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டதால், அதன் தாக்கம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேசமயம், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் 55 கி.மீ வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதோடு, தென் தமிழக கடலோர பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`