பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!

15shares
Image

கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவா எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பெங்களுருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பரசுராம் வாக்மோர் நேற்று பெங்களுருவில் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கொலை வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்வா செயற்பாட்டாளரும், சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்தவருமான நவீன் குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`