நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி: சிபிஎஸ்இ பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

8shares
Image

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக சிபிஎஸ்இ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நாடு முவதும் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 60 சதவிகித மாணவர்கள் தோல்வியடைந்தார். இதில் தமிழ்மொழி வினாத்தாளில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.கே.ரங்கராஜன், நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது. மேலும், பிழைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்ககோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டதோடு, வழக்கை ஜூன் 27-ம் தேதி ஒத்தி வைத்தது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`