தமிழ்த்துறை மாணவர்களுக்கு கட்டணம் இல்லை: நெல்லை பல்கலைகழகம் அதிரடி!

0shares
Image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதல், முதுகலை தமிழ்த்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

நெல்லை அபிசேகப்பட்டியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டிற்கான தமிழியல் துறையில், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் முதுகலை தமிழ்த்துறையில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தென் மாவட்டங்களில் முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்த்துறையில் முதுகலை சேரும் மாணவர்களுக்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது என கூறியுள்ளார். மேலும் 41 உறுப்பு கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த உள்ளதாகவும், கடையநல்லூர், நாகலாபுரம், சாத்தான்குளம், கன்னியாகுமரி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என கூறியுள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!