கவிழுமா எடப்பாடி ஆட்சி ; அரசியல் நோக்கர்களின் பார்வை.!

20shares

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். ஆனால், தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என நீதிமன்ற கதவை தட்டியது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குழாம். நெடு நாட்களாக நடைபெற்று வந்த மேற்கண்ட வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுமென அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கின் தீர்ப்பு எப்படி அமையுமோ என அரசியல் அரங்கே பரபரத்து கிடக்கிறது.

இந்த சூழலில் மேற்கண்ட வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்திடக்கூடும்.. தீர்ப்பின் அடிப்படையில் என்ன மாதிரியான மாற்றங்கள் அரசியல் அரங்கில் நேரும் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரின் கருத்துக்களை அறிய நாம் முற்பட்டோம்.

அவர்கள் முன் வைத்த கருத்துக்கள் ஆவன, "இயன்றவரையில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வராது. அதற்கான முன் உதாரணம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக பகிரங்கமாகவே வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவு 11 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும், அந்த வழக்கு விசாரணையின் போது சபாநாயகரின் முடிவுக்குள் நீதிமன்றம் தலையிடாது என தீர்ப்பளிக்கப்பட்டதும் தான்" என கோடிட்டு காட்டுகின்றனர்.

அதே சமயம், தன்னிச்சையாக பாஜகவைச் சேர்ந்த இரு நபர்களை புதுவையில் எம்எல்ஏக்களாக தன்னிச்சையாக நியமித்த ஆளுநர் கிரண் பேடியின் நியமனம் செல்லாது என புதுவை சபாநாயகர் உத்தரவிட்ட பின்பும், ஆளுநரின் எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆக, அரசுக்கு எதிரான தீர்ப்பு இயன்றவரையில் வழங்கப்படாது என்றும், அப்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிக்கப்பட்டால் அரசின் ஸ்திரத்தன்மை குறைந்து கவிழும் சூழல் ஏற்படும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க