சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் குவிப்பு!

12shares
Image

சேலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 8 வழிச்சாலை திட்டம் குறித்து இன்று பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை - சேலம் வரை 8 வழிச்சாலையினை ரூ. 10,000 கோடி செலவில் மாநில அரசின் ஒப்புதலுடன், மத்தியஅரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 150 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை கைது செய்து காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்க கூடிய இத்திட்டம் குறித்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ஏராளமான போலீசார் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடியில் நடந்த துயரசம்பவம் போல், 8 வழிச்சாலையினை எதிர்த்து போராடும் சேலம் பொதுமக்களின் போராட்டத்தில் நடந்து விட கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க