தமிழிசையை புறக்கணித்த செய்தியாளர்கள்.. ஏன் தெரியுமா.?

51shares

பாஜக தலைவர் தமிழிசையை கேள்விகள் எதுவும் கேட்காமல் புறக்கணித்துள்ளனர் கோவை மாநகர செய்தியாளர்கள்.

சமீபத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒருங்கிணைத்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் பாஜகவுக்கு எதிராக சில செய்திகளை சுட்டிக்காட்டிய போது, பாஜகவினர் அவரை அடிக்க பாய்ந்ததுடன், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரை தாக்க முயன்றனர். ஆனால், காவல்துறையோ அமீர் மீதும், குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி மீதும், அந்த தொலைக்காட்சியின் கோவை மாவட்ட செய்தியாளர் மீதும் மட்டுமே வழக்கு பதிந்தது. இதற்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், இன்று கோவை சென்றார் பாஜக தலைவர் தமிழிசை. அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது அவரிடத்தில் கேள்விகள் எதனையும் முன் வைக்காமல் புறக்கணித்துள்ளனர் செய்தியாளர்கள். இதன் காரணமாக அங்கிருந்து தமிழிசை புறப்பட்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க