18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ; இரு வேறு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்.!

18shares

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். ஆனால், தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என நீதிமன்ற கதவை தட்டியது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குழாம். நெடு நாட்களாக நடைபெற்று வந்த மேற்கண்ட வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுமென அறிவித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அதன் படி, மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு நபர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் முடிவுக்குள் தாம் தலையிட வேண்டுமெனவும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என அவர் தெரிவித்தார்.

அதே சமயம், மற்றுமோர் நீதிபதியான சுந்தர், அதிமுக கொறடா எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு எனவும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் வேறு வேறு கருத்துக்களை தெரிவித்தமையினால் மேற்கண்ட வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் பரபரத்து கிடக்கிறது தமிழகம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!