மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்!

0shares
Image

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஆண்டு மே 27ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டார். ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பேராசிரியராக பணியாற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், செல்லத்துரை பேராசிரியராக பணியாற்றியதில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

செல்லத்துரையின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, செல்லதுரையின் நியமனத்தை மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ததோடு, புதிய குழு ஒன்றை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவிட்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

அமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்?

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!

தமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள்!! பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை!!