தீராத மோதல்.. வைகோவை விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியினர்.!

14shares

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கட்சி தலைமைகளுக்கு இடையேயான மோதலின் காரணமாக இரு கட்சியின் தொண்டர்களும் தங்களுக்குள்ளாக சமூக வலைத்தளங்களிலும், நேரடியாகவும் மோதிக்கொள்கின்றனர்.

சிறிது நாட்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி சீமான் உலக தமிழர்களிடத்தில் பணம் பெற்று அவர்களை ஏமாற்றி வருவதாக மிக காட்டமாக விமர்சித்திருந்தார் வைகோ.

அதற்கு, நான் அப்படி பணம் ஏமாற்றுவதாகயிருந்தால் வருமான வரித்துறை கவனித்துக்கொள்ளும். இவர்கள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என சீமான் தரப்பிலிருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் என்ற அடையாளத்துடன் சமூக வலைத்தளங்களில் செயல்படும் நபர்கள் சிலர் மீண்டும் வைகோவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். வைகோவுக்கு உலக நாடுகளிலிருந்து வராத பணமா சீமானுக்கு வந்துவிடப்போகிறது என்பதுவே அவர்களின் வாதமாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க