ஆள வாங்க.. ஆள வாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே! இனிமேல் கமல்ஹாசனை இப்படித்தான் அழைக்கவேண்டுமாம்!

12shares
Image

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்களுக்கு வாழ்த்து கோஷம் போடுவது எப்படி என்பதற்கான துண்டு பிரசுரங்களை அடித்து வினியோகித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது.

இந்த நிலையில் முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்.

பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதனிடையே கட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடிய தொண்டர்கள் வாழ்த்து கோஷம் போடுவது எப்படி என்பதற்கான துண்டு பிரசுரங்களை அடித்து வினியோகித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள்.

முதல் வரியில், ஆள வாங்க.. ஆள வாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே. இதையடுத்து அனைவரும் சேர்ந்து இப்படி சொல்ல வேண்டுமாம், ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க.. ஆள வாங்க. இப்படியாக 8 வகை கோஷங்களை எழுதி கொடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க