மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும் - காதலின் மகத்துவத்தை கவிதைகளாய் வடித்த கவிஞன்.!

24shares

கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவினால் மரணித்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று. மண்ணில் எத்தனையோ கோடி பேர் பிறந்திட்டாலும் தங்கள் வாழ்ந்ததற்கான அடையாள சுவடுகளை ஆழ வேருன்ற செய்துவிட்டு செல்பவர்கள் வெகு சிலர் தான். அத்தகையோரில் ஒருவரே நா. முத்துக்குமார்.

ஆம், மண்ணுக்குள் செல்ல மரத்தடி வேர்கள் பயந்திட்டால் விண்ணுக்கு நிகரான விருட்சங்கள் உருவாகிடுதல் சாத்தியம் இல்லை தானே. அப்படி தனது இளமைக்காலம் தொட்டு பல இன்னல்களை கடந்து சினிமா துறையை இயக்குனராகும் கனவுடன் அணுகியவரை கவிஞனாய் அரவணைத்துக்கொண்டாள் சினிமாவின் பேரன்னை.

மனித மனங்களின் உணர்வுகளை கவிதைகளாய் வடித்தெடுக்கும் ஆற்றல் பெற்ற முத்துக்குமார், இவ்வுலகில் உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கான அடித்தளமான காதல் குறித்து எழுதியவை ஏராளம், ஏராளம்.

காதலினை இன்று சாதி ; மதம் கொண்டு எதிர்ப்பவர்கள் ஏராளம் இருந்தாலும், உண்மை காதலின் வீரியத்தினை, மகத்துவத்தினை கற்றது தமிழ் திரைப்படம் துவங்கி எண்ணற்ற திரைப்படங்களில் வெகு நேர்த்தியாய் வடித்திருப்பார்.

காதல் திரைப்படத்தில் இப்படியானதோர் வரி வரும், "மின்சார கம்பிகளின் மீது மைனாக்கள் கூடு கட்டும்" என்பதாய். ஆம், உண்மை காதல் அத்தகைய வீரியமும் - மகத்துவமும் கொண்டதே. காதலின் மகத்துவத்தினை தன் பாடல்களின் வழியே வெளிக்கொணர்த்திட்ட அசத்திய கலைஞனை நினைவு கூர்வோம்.

இதையும் தவறாமல் படிங்க