மத்திய அரசுக்கும் எங்களுக்கும் தாய் - பிள்ளை உறவு - திருவாய் மலர்ந்த அமைச்சர்.!

10shares

மத்திய அரசுக்கும் எங்களுக்கும் இடையே உள்ளது தாய் - பிள்ளை உறவு போன்றது என திருவாய் மலர்ந்திருக்கிறார் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற அரசியல் சதிராட்டங்களில் தங்களுக்கு வேண்டாத சசிகலா அணியை முற்றாக ஒதுக்கி எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்கி இந்த அரசு எந்த வகையிலும் வீழ்ந்துடாதபடியான செயற்பாடுகளை மறைமுகமாக நடத்திவருவது மத்திய பாஜக அரசு. அது தொடர்பான விமர்சனங்களை நாம் தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் கிராமத்தில் உள்ள மக்களிடத்திலும் காணலாம்.

அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கிற வகையில் தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மத்திய அரசுக்கும் எங்களுக்கும் இடையே உள்ளது தாய் - பிள்ளை உறவு என இன்று தெரிவித்துள்ளார். இது அரசியல் ஆர்வலர்களை மிகுந்த நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்னதாக தமிழகம் வந்த அமித்ஷா, தமிழகத்தில் அதிகப்படியான ஊழல் நடப்பதாக பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க