18 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் பகீர் வாக்குமூலம்.!

69shares

இந்திய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன என அரசு தரப்பே புள்ளி விவரங்களை வெளியிட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சி அடைய செய்திட்ட நிலையில் அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து வெளிவரும் செய்திகளும் நம்மை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகின்றன.

பீகார், சரண் மாவட்டத்தில் பார்சாகர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு ஹர் கிஷோர் ராய்யை சந்தித்து புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் கடந்த 8 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் என 18 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் உள்ளார். இந்த விவகாரம் இந்திய அளவில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியது.

இந்நிலையில் மேற்கண்ட சம்பவம் குறித்து மாணவி அளித்துள்ள வாக்குமூலம் :

என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார். நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

பின்னர் அவரது அறையில் என்னை சுத்தம் செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க