பயிற்சியாளரால் பறி போன மாணவியின் உயிர்

151shares

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு பேரிடர் பிரச்சனைகளில் போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று இதில் கற்றுத்தரப்பட்டது. அதேபோல் தீ விபத்து சம்பவத்தின் போது எப்படி மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்க வேண்டும் என்றும் கற்றுத்தந்தனர்.

இந்த பயிற்சிக்காக, பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர், லோகேஸ்வரி என்று மாணவியை அழைத்துள்ளார். அந்த மாணவி அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2 ஆம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு கட்டி இறங்கும் போது, அந்த மாணவி, அந்த மோசமான சம்பவ நடந்து இருக்கிறது.

மாடியில் இருந்து கீழே விழும் போது கீழே வலை வைத்து பிடிக்கும் முறையை பயிற்சி அளித்து இருக்கிறார்கள். இதில் கீழே விழும் போது, அந்த மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பேரிடர் மேலாண்மை பயிற்சி என்ற பெயரில் பயிற்சியாளர் ஒருவரே மாணவியை 3வது மாடியிலிருந்து தள்ளிவிட்டதால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க