இந்துக் கடவுள்களை அவமதித்தாரா கார்த்திகேயன் ; ஊடகவியலாளரை மிரட்டும் ஹெச்.ராஜா.!

21shares

பாஜக தேசிய தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா தமது முகநூல் பக்கத்தில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் நெறியாளர்களுள் ஒருவரான கார்த்திகேயன் மீது இந்து கடவுள்களை அவர் அவமதித்துவிட்டார் என்ற பகீர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதத்தில், மாதவிடாய் நாட்களில் பெண்களை ஏன் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்ற கேள்வியெழுப்பியும், பெண் கடவுள்கள் தங்களது மாதவிடாய் நாட்களில் எங்கே செல்வார்கள் என கேள்வியெழுப்பியமைக்காகவே கார்த்திகேயனை வசைபாடியுள்ளார் ஹெச்.ராஜா. மேலும், கார்த்திகேயனின் குடும்பமும் மிரட்டப்படுவதாக தெரிகிறது.

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதலே மத ரீதியிலான செயற்பாடுகள் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய அவர்கள் முனைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அறிவாசான் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்துவிட்டு, பூகம்பத்தினை போல் எதிர்ப்பு கிளம்பியவுடன் அதனை நான் தெரிவிக்கவில்லை என ஹெச்.ராஜா பயந்து பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தினை பொறுத்தமட்டில் கருத்தியல் ரீதியிலாக எதிர்க்க வலுவற்றவர்களே, தனி நபர்களுக்கெதிரான வன்முறை அரசியலை முன் வைப்பார்கள் என்பதுவும் ஏற்கத்தக்கதுவே.

இதையும் தவறாமல் படிங்க