சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை தாக்கியது உண்மையா? துரைமுருகன் பதில்.!

23shares

தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் நிச்சயம் மறக்கத்தக்கது அல்ல. அதற்கான காரணம், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு வனவாசத்தினை முடித்து திமுக ஆட்சி பொறுப்பினை ஏற்றிருந்த நேரம், சட்டப்பேரவையில் மேற்கண்ட தினத்தன்று அந்த ஆண்டிற்கான பட்ஜெட்டினை முதல்வரான கலைஞர் தாக்கல் செய்ய முயல, தனது தொலைபேசி உரையாடல்கள் முதல்வர் கலைஞரின் தூண்டுதலின் பெயரால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், அதன் காரணமாக முதல்வர் கருணாநிதியின் மீது உரிமை மீறல் பிரச்சனையை தாம் கொண்டுவருவதாகவும் தெரிவித்து அமளியை துவக்கினார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா.

அதன் பின்பு சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள் நிச்சயம் தமிழக சட்டசபை வரலாற்றில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்படவேண்டியவை.

அன்றைய தினம் இன்னுமோர் அதிரடியை கிளப்பியிருந்தார் ஜெயலலிதா. கிழிந்த சேலை, கலைந்த தலையுடன் வெளிவந்த ஜெயலலிதா தனது சேலையை திமுக உறுப்பினர் துரைமுருகன் பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தினார் என தெரிவித்திருந்தார். ஆனால், அதனை முற்றிலும் மறுத்தே வந்துள்ளார் துரைமுருகன்.

இன்று வரை மர்மமாக உள்ள மேற்கண்ட விஷயம் குறித்து விளக்கமளித்துள்ள துரைமுருகன், "அன்றைய தினம் பேரவையில் ஒரு ஆவேச சூழல் நிலவியதென்னவோ உண்மைதான். ஆனால், ஜெயலலிதாவை யாரும் தாக்கவில்லை ; தவறாகவும் நடத்தவில்லை. இதற்கு அன்று பேரவையில் ஜெயலலிதாவின் அருகிலிருந்தவர்களே சாட்சி. அப்படியே நான் அவரை இழிவுபடுத்தியிருந்தால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் என்னை பழிவாங்கியிருக்க மாட்டாரா அவர்" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க