யாழ் மக்களுக்கு கிடைக்கபோகும் வரப்பிரசாதம்!

302shares

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டிற்குள் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி அளித்துவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தவிடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், விரைவில் இந்திய விமான சேவைகள் குழு ஒன்று பலாலிக்கு சென்று ஆய்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கான விமான சேவை நடத்தப்படுமாக இருந்தால், வடக்கில் இருந்து இந்தியா செல்வோரின் செலவுகள் குறைவடையும்.

அத்துடன், வடமாகாணத்துக்கான வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பலாலியில் இருந்து மலேசியாவிற்கான விமான சேவையும் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க