சிலை கடத்தல் வழக்கு ; சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை.!

11shares

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட ஒரே ஆண்டில், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 பழங்கால சிலைகளை மீட்டு அதிரடி கிளப்பிய நிலையில், சிலை கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய பெரும் புள்ளிகளின் அழுத்தங்களின் காரணமாக சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு.

சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் பொன். மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்பதற்காகவே சிபிஐக்கு சிலை கடத்தல் வழக்கு விசாரணை மாற்றப்படுவதாக தெரிவித்த அரசின் பதிலால் அதிருப்தியடைந்தனர் தமிழக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும். இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் தமிழக அரசு சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஒரே நாளில் உத்தரவிட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் ஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து அதிரடி காட்டியுள்ளனர்.

நீதிமன்றத்தின் மேற்கண்ட அதிரடியால் அதிர்ந்து கிடக்கின்றது தமிழக அரசு வட்டாரம்.

இதையும் தவறாமல் படிங்க
`